ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Jun 2017 4:16 AM IST (Updated: 4 Jun 2017 4:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே உள்ள கருத்தையாபுரம் விலக்கில் ஆழ்குழாய் கிணறு அமைக்கவும், அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

விளாத்திகுளம்,

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று காலையில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து வருகிற 7–ந்தேதிக்குள் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்றும், அதுவரையிலும் கருத்தையாபுரத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெறாது என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story