தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிதான் நடக்கிறது, சீமான் பேட்டி


தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிதான் நடக்கிறது, சீமான் பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2017 4:16 AM IST (Updated: 4 Jun 2017 4:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிதான் நடக்கிறது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.

 

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த அந்த கட்சி தலைவர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசை, முன்னாள் முதல்–அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவின் பினாமி அரசு என விமர்சனம் செய்கிறார். ஆனால் முதல் பினாமி ஓ.பன்னீர்செல்வம் தான். தமிழகத்தில் பா. ஜனதா ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

தமிழர்கள்

ஜி.எஸ்.டி. மசோதாவை நாம் தமிழர் கட்சி ஆரம்ப நிலையிலேயே கடுமையாக எதிர்த்து போராட்டங்களை நடத்தியது. அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது அமல்படுத்தும் நிலையில், உணவகங்கள் மூடல் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இனி மசோதைவை நிறுத்த முடியாது. போராடி வரியை குறைக்க வேண்டுமானால் முடியும். தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் வாழும் உரிமையை இந்திய அரசியல் அமைப்பு சாசனம் வழங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story