சுனைப்பட்டு கிராமத்தில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கலி
சுனைப்பட்டு கிராமத்தில் புகையிலை எதிர்ப்பு மனித சங்கலி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
செய்யாறு,
செய்யாறு அருகே நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சுனைப்பட்டு கிராமத்தில் புகையிலை எதிர்ப்பு மனித சங்கலி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு டாக்டர் ஜி.மாலினி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் கே.சம்பத், பி.மாதவன், மகளிர் சுயஉதவிக்குழு நிர்வாகிகள் மகாலட்சுமி, லாவண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோல செய்யாறில் ஆரணி கூட்ரோட்டில் இருந்து மார்க்கெட் பகுதி வரை புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
Related Tags :
Next Story