மலைகிராமங்களில் மணமாகும் சிறுமிகள்
‘என் பொண்ணு எட்டாம் வகுப்பு முடித்திருக்கிறாள். ஒன்பதாம் வகுப்பு படிக்கணும்னா அவள், எங்க கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக நடந்தே போகணும்.
‘என் பொண்ணு எட்டாம் வகுப்பு முடித்திருக்கிறாள். ஒன்பதாம் வகுப்பு படிக்கணும்னா அவள், எங்க கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக நடந்தே போகணும். நான் பள்ளியில் சேர்த்துவிட தயாராகத்தான் இருக்கிறேன். என் பொண்ணுதான் போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறா! என்ன பண்ணலாம்?’- என்று ஒருவர் தன் நண்பரிடம் ஆலோசனை கேட்டால் “பேசாமல் உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைச்சிடுப்பா” என்று அந்த நண்பர் பதில் சொன்னால், அதை கேட்கும் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படத்தானே செய்யும்!
அப்படி ஒரு அதிர்ச்சியை நாம் சந்தித்தது ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில். அங்குள்ள மலைகிராமமான தம்புரெட்டியை சேர்ந்த மாதேவாவுக்கு 11 பிள்ளைகள். அதில் ஒரு சிறுமி இப்போது 8-ம் வகுப்பு படித்து முடித்திருக்கிறாள். மகளது எதிர்கால கல்வி பற்றி மாதேவா கேட்ட கேள்விக்குத்தான் நண்பர் அப்படி ஒரு பதிலை சொல்லி, கேட்டுக்கொண்டிருந்த நம்மை கிறங்கடித்தார். அதை தொடர்ந்து நமக்கு அந்த மலைகிராமங் களில் இருந்து கிடைத்த தகவல்கள் பலவும் அதிர்ச்சி ரகம்தான்!
ஈரோடு மாவட்டம் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளில் மாநிலத்தில் முன்னணியில்தான் இருக் கிறது. எண்ணற்ற தொழில் நிறுவனங்களும் உள்ளன. நாகரிக வளர்ச்சிலும் முன்னேறியிருக்கும் இந்த மாவட்டத்தின் இன்னொரு முகம் மலைகளுக்கு பின்னால் மறைந்து கிடக் கிறது.
‘பர்கூர் மலை...’ என்று ஒற்றை வரியில் சொல்லப்படும் அந்த பகுதியில், 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கண்ணுக்கு தெரியாத தூரத்தில், காட்டு விலங்குகள் சர்வசாதாரணமாக வந்து போகும் அடர்ந்த வனப்பகுதியில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் ஓரத்தில் இருந்து தொடங்குகிறது மலைப்பாதை. நீண்டு கிடக்கும் அந்த சமச்சீரற்ற சாலையை கடந்தால் தாமரைக்கரை கிராமம் வரவேற்கிறது. அடுத்து ஆரம்பிக் கிறது அடர்ந்த காட்டுப்பகுதி. வழியில் கடைகள் மட்டுமல்ல மனிதர்களையும் சந்திப்பது அபூர்வம்.
தாமரைக்கரையில் இருந்து மணியாட்சி நோக்கி செல்லும் சாலைக்குள் நுழைந்தால் சிறிது நேரத்தில் திகில் பயணம் தொடங்கிவிடுகிறது. கரடு முரடாக வளைந்து செல்லும் சாலையில் ஆங்காங்கே யானை கழிவுகள். தந்தத்தால் குத்தப்பட்ட மண்மேடுகள். தும்பிக்கைகளால் முறித்து எறியப்பட்ட மூங்கில்கள். திகிலடையாமல் கடந்தால், மணியாட்சி பள்ளம் வரவேற்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பாலம் மேற்கு மலைப் பகுதியை இணைக்கிறது. அதை சுற்றிலும் ஆங்காங்கே மலை கிராமங்கள். சின்னஞ்சிறு வீடுகள். அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுக்கும், பெரியவர் களுக்கும் ஆடு, மாடு மேய்ப்பதுதான் தொழில். வானம் பார்த்த மானாவாரி பூமி. கேழ்வரகும், சோளமும் விதைக்கப்படுகிறது. கோடையில் தட்டைப்பயறு, பாசிப்பயறு விதைக்கிறார்கள்.
இங்குள்ள ஒருசில மலைகிராமங்களில்தான் சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். சிறுவர்களையும் திருமணபந்தத்தில் இணைத்துவிடுகிறார்கள்.
“எனக்கு 10 வயதாக இருந்தபோது முதல் திருமணம் நடந்தது. எனக்கு மனைவியான அந்த சிறுமி என்னோடு வாழ மறுத்து பிரிந்துசென்று விட்டாள். பின்னர் இன்னொரு திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 11 குழந்தைகள்” என்று சொல்லும் மாதேவாவுக்கு தற்போது 65 வயது.
பொதுவாக அங்கு வசிக்கும் ஆண்களில் பெரும்பாலானவர் களுக்கு அவர்களது சரியான வயது தெரியவில்லை. இதுகூட அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. சிறுமிகளிடம் வயதை கேட்டால், 18 அல்லது 20 என்று கண்களை மூடிக்கொண்டு கூறு கிறார்கள். 20 வயது என்று கூறும் பெண்ணின் தாய்க்கே 30 வயதுக் குள்தான் இருக்கும்.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் விவசாய வேலைகள் செய்கிறார்கள். காலையில் சென்றால் மாலையில் திரும்புகிறார்கள். மின்சார வசதி இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் டி.வி. இயங்குகிறது. டிஷ் பொருத்தியிருக்கிறார்கள். இலவச மின்விசிறியும் பயன்படுத்தப்படுகிறது.
“எங்கள் கிராமங்களில் பெண்களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைப்பது வழக்கம். ஆனால் இப்போது ஓரளவு பால்ய விவாகத்தை தடுத்துவிட்டோம்” என்று கூறுகிறார், 70 வயதை கடந்த ஜவராயன்.
“நான் அந்த காலத்தில் 6-வது வரை படித்தேன். எனக்கு முதல் திருமணம் எந்த வயதில் நடந்தது என்பது நினைவில் இல்லை. என்னை விட 3 அல்லது 4 வயது சிறுமியை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அப்போது அந்த சிறுமி வயதுக்கு வந்திருக்கவில்லை. நானும், அவளும் சேர்ந்தே விளையாடுவோம். அவள் மீது எனக்கு ரொம்ப பிரியம். திடீரென்று ஒருநாள் அவள் பெரிய மனுஷி ஆகிவிட்டாள் என்றார்கள். நாங்கள் சேர்ந்து இருந்தோம். அடுத்த சில நாட்களிலேயே அவள் கர்ப்பமானாள். ஆனால் சிறுமியான அவளால் குழந்தையை சுமக்க முடியவில்லை. குழந்தையும் அவளும் இறந்து விட்டனர். இன்னும் என்னால் அவளை மறக்க முடியவில்லை..” என்று நெகிழும் ஜவராயன், பின்பு அதிகம் தாமதிக்காமல் அடுத்து ஒரு திருமணம் செய்திருக்கிறார்.
“இரண்டாவது திருமணத்தில் எங்களுக்கு 3 பெண்கள், 3 ஆண்கள் பிறந்தனர். இப்போது எனது பேத்தி திருமண வயதில் இருக் கிறாள். அவள் 8-ம் வகுப்புவரை படித்து விட்டாள். அதற்கு பிறகு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவில்லை. அருகில் பள்ளிக்கூடம் இருந்தால் அனுப்பலாம். ஆனால் பல மைல் தூரத்துக்கு இந்த காட்டுப் பகுதியில் பெண்களை வெளியில் அனுப்புவது நல்லதல்ல. அனுப்பினால் அவர்கள் கெட்டுப்போவதற்கான சூழ்நிலைகள் இங்கு அதிகம். சிறு வயதிலேயே கெட்டுப்போய் நல்ல வாழ்க்கை அமையாத பெண்கள் அதிகம் உள்ளனர்.
இப்போது எங்கள் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற் பட்டுவிட்டது. பெரிய மனுஷி ஆவதுவரை பெண்களை திருமணம் செய்து கொடுப்பதில்லை. இங்குள்ள மாணவிகள் 12-ம் வகுப்புவரை படிக்க பள்ளிக்கூட வசதி செய்துதர வேண்டும். 12-ம் வகுப்புவரை அவர்கள் படித்தால் 17 அல்லது 18 வயது முடிந்து விடும். அதற்கு பிறகு திருமணம் செய்துவைத்துவிடலாம்” என்கிறார், ஜவராயன்.
இன்னொருவர், “சிறுவர்- சிறுமிகளை படிக்க வையுங்கள் என்கிறார்கள். நாங்களும் அது நல்லது என்று பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறோம். பல மைல்கள் தூரம் ஆண்களும், பெண்களும் சேர்ந்தேதான் நடக்கிறார்கள். அப்போது எங்கே செல்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்? அவர்களுக்கு வசதியாக காட்டுப்பகுதி அமைந்திருக் கிறது. ஆசிரியர்களாலும் முழுமையாக கண்காணிக்க முடியாது. அதனால் ஏற்படும் கசப்பான பின்விளைவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல்தான், சிறுவயதிலேயே திருமணம் செய்துவைத்துவிடுகிறோம். இது முழுக்க முழுக்க எங்கள் மக்கள் சார்ந்த முடிவு. அரசாங்கம் கேட்டால், பெண்ணுக்கு 18 வயதாகி விட்டது என்று சொல்வோம்” என்று தடாலடியாக கூறுகிறார்.
இன்னொருவர், “இந்த மாதம் திருமணத்துக்காக 150-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டி இருக்கிறார்கள்” என்றார்.
‘எங்கே பணம் கட்ட வேண்டும். கோவிலுக்கா? அல்லது மண்டபத்துக்கா? திருமணம் நடக்க இருக்கும் மணமக்களின் வயது என்ன?’ என்று கேட்டதும், பதில் சொல்லாமல் அங்கிருந்து நழுவிவிட்டார்.
அங்குள்ள திருமணமுறையும் வித்தியாசமாக இருக்கிறது. அதை பற்றி அந்த பகுதியை சேர்ந்த பெரியவர் ஒருவர் சொல்கிறார்!
“திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்ணின் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்டு செல்வார்கள். மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்ணுக்கு பணம் கொடுக்கவேண்டும். அதனால் பெண்ணின் பெற்றோரிடம் தொகை பற்றி பேசுவார்கள். பெண்ணின் நிறம், உடல்வாகு, அழகு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி பேரம் பேசுவார்கள். ‘உருப்படி கருப்பா இருக்கு. பல்லு கொஞ்சம் தள்ளிக்கிட்டு இருக்கு. அதனால் விலையை குறைத்துக்கொள்’ என்றெல்லாம்கூட சொல்வார்கள். தற்போதைய நிலவரப்படி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு கொடுக்கிறார்கள். இந்த பேரம் முடிந்தால் திருமண நாள் முடிவுசெய்யப்படும்.
எங்களிடம் வரதட்சணை பழக்கம் கிடையாது. பணத்தை கொடுத்து பெண்ணை வாங்கிக்கொள்கிறோம். ஒருவேளை பிற்காலத்தில் அந்த பெண்ணுக்கு தன் கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காவிட்டால், பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த தொகையை 2 மடங்காக திருப்பி செலுத்த வேண்டும். மாப்பிள்ளை வீட்டாருக்கு பணம் செலுத்தியதும், அவர்களை உறவில் இருந்து விடுவித்து விடுவார்கள். பின்னர் அந்த ஆணும் பெண்ணும் வேறு திருமணம் செய்து கொள்ளலாம்” என்றார்.
இப்படிப்பட்ட வித்தியாசமான வாழ்வியல் முறைகள் அங்கு கடைப்பிடிக்கப்படுவதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு பழங்குடியின மக்கள் நல சங்க தலைவர் வி.பி.குணசேகரன், “மலைவாழ் பழங்குடியின மக்கள் மத்தியில் சட்டப்பூர்வ திருமண வயது நிரம்புவதற்கு முன்பு திருமணம் நடைபெறும் வழக்கம் தொன்று தொட்டே இருக்கிறது. பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்படும் திருமணங் கள் ஒருபுறம் நடந்தாலும், சிறுவர்- சிறுமிகள் தங்களுக்குள்ளாகவே தங்கள் இணையை தேர்ந்து எடுப்பதும் தொடர்ந்துதான் வருகிறது. இந்த நிலை நீங்க வேண்டும் என்றால் கல்வி முழுமையாக கிடைக்க வேண்டும். கல்வியால் மட்டுமே இவர்களிடம் நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும்” என்றார்.
மலைப்பகுதியில் கல்வி மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் நடராஜ், “இங்குள்ள மலைகிராமங்களில் பள்ளிக்கூடங்கள் இல்லாமல் இருந்ததால், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் நிதியின் கீழ் நலத்துறை பள்ளிகளை தொடங்கினோம். அந்த பள்ளிக்கூடம் ஒன்றில் படித்த சிறுமி ஒருத்தி சில நாட்கள் வகுப்புக்கு வரவில்லை. விசாரித்தபோது, அவளுக்கு திரு மணம் நிச்சயம் ஆகிவிட்டது என்ற தகவல் கிடைத்தது. அன்றைய ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தேன். அவர் அதற்கான ஆதாரங்களை கேட்டார்.
நான் அந்த சிறுமியின் திருமணத்தை முழுமையாக வீடியோ படம் எடுத்து கலெக்டரிடம் கொடுத்தேன். அதைப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட மலைக்கிராமத்தை தான் பார்க்க வேண்டும் என்றவர், ‘அரசுத்துறை அதி காரிகள் கூட்டம் அந்த கிராமத்தில் நடை பெறும்’ என்று அறிவித்தார். அங்கு அதிகாரிகள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து அனைத்து கிராமங்களையும் பார்வையிட்டார். குடி நீர் வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார். அனைத்து மலைக்கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் தொடங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மேல் அவர்கள் படிப்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. நாங்கள் சிறு வயது திருமணத்திற்கு எதிராகவும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வரு கிறோம்” என்றார்.
ஈரோடு மாவட்ட சைல்டு லைன் இயக்குனர் பாதிரியார் அருண், “இந்த மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் 111 குழந்தை திரு மணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. அதிக பட்சமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21 திருமணங்களை தடுத்து நிறுத்தினோம். வறுமையால் வாடும் குடும்பங்களில் உள்ள சிறுமிகளுக்கும், தாய் அல்லது தந்தையை இழந்த சிறுமிகளுக்கும் விரைவாக திரு மணம் செய்துவைத்துவிடுகிறார்கள். 12 வயது நிறைவடைந்த ஏராளமான சிறுமிகளுக்கு திருமணம் நடக்க இருந்ததை தடுத்து இருக்கிறோம். கடந்த ஆண்டு 60 வயது முதியவர் ஒருவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்ள இருந்ததை கண்டறிந்து தடுத்தோம்.
பெரும்பாலும் பெற்றோர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். சிறுமிகள்தான் பாவம். அவர்கள் மறுத்தாலும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இப்படி மறுக்கும் சிறுமிகளின் தோழிகள், பெயர் சொல்ல விரும்பாத உறவினர்கள்தான் 1098-க்கு அழைத்து எங்களுக்கு விவரம் சொல்கிறார்கள். சிறுமிகள் பலர் தங்கள் பள்ளிக்கூடங்களில் இருந்து தொலைபேசி எண் தெரிந்து கொண்டு எங்களை அழைத்து பல திருமணங்களை தடுக்க உதவி இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் குழந்தை திருமண தடுப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.
நல்லது நடக்கட்டும்! காலம் பதில் சொல்லட்டும்!

Related Tags :
Next Story