குருவாடி கிராமத்தில் பயன்பாட்டுக்கு வராத ரே‌ஷன் கடை புதிய கட்டிடம்


குருவாடி கிராமத்தில் பயன்பாட்டுக்கு வராத ரே‌ஷன் கடை புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:00 AM IST (Updated: 5 Jun 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

குருவாடி கிராமத்தில் பயன்பாட்டுக்கு வராத ரே‌ஷன் கடை புதிய கட்டிடம் நிதி இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

சாயல்குடி,

சாயல்குடி அருகே குருவாடி கிராமத்தில் ரே‌ஷன் கடை புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளது. இதனால் நிதி இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

ரே‌ஷன்கடை

சாயல்குடி அருகே உள்ள குருவாடி, கொக்காடி, எஸ்.எம்.இலந்தைக்குளம் ஆகிய கிராம மக்கள் பயன்படும் வகையில் தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின்கீழ் குருவாடி கிராமத்தில் தனியார் வாடகை கட்டிடத்தில் ரே‌ஷன்கடை இயங்கி வந்தது. இக்கடை ஊருக்குள் இருந்ததால் போக்குவரத்து சிரமம் கருதி மக்களின் வேண்டுகோளை ஏற்று குருவாடி பஸ் நிறுத்தம் அருகில் கடலாடி ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.6¾ லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

ஆனால் இந்த கட்டிடம் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் ரே‌ஷன் கடை செயல்பட்டால் கொக்காடி, எஸ்.எம்.இலந்தைக்குளம் பகுதி மக்கள் மற்றும் குருவாடி கிராம மக்களும் எளிதில் ரே‌ஷன் பொருட்களை வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும்.

கோரிக்கை

தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரே‌ஷன் கடைக்கு சென்று வரும் சிரமமும் குறையும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். சுமார் 3 வருடங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ள ரே‌ஷன் கடை புதுக்கட்டிடம் கேட்பாரற்று கிடப்பதால் சமூக விரோத செயல்கள் அரங்கேறிவருவதாக கூறப்படுகிறது.

மேலும் தனியார் கட்டிடத்தில் ரே‌ஷன் கடை வாடகை கொடுத்து செயல்படுவதால் நிதி இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி நிதி இழப்பை தடுக்க புதிய கட்டிடத்தில் ரே‌ஷன் கடை செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story