க.செல்லம்பட்டு கிராமத்தில் ரூ.9 லட்சம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணி
க.செல்லம்பட்டு கிராமத்தில் ரூ.9 லட்சம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணி அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி,
க.செல்லம்பட்டு கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.
புதிய குடிநீர் கிணறுகள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் க.செல்லம்பட்டு கிராமத்தில் ரூ.9 லட்சம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். காமராஜ் எம்.பி., விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., பிரபு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன் வரவேற்றார்.
அமைக்கும் பணி தொடக்கம்சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு புதிய குடிநீர் கிணறு அமைப்பதற்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து கரடிசித்தூரில் ரூ.6½ லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், தாவடிப்பட்டில் ரூ.3½ லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பால் சேகரிப்பு மைய கட்டிடம், மேலூர் ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம், பெரியசிறுவத்தூர் கிராமத்தில் ரூ.6½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றையும் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, அ.தி.மு.க.(அம்மா) ஒன்றிய செயலாளர்கள் கள்ளக்குறிச்சி ராஜசேகர், தியாகதுருகம் அய்யப்பா, மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட விவசாய அணி செயலாளர் கதிர்.தண்டபாணி, மாவட்ட மகளிரணி தலைவி அழகுவேல் பாபு, நகர செயலாளர் பாபு, மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் ஞானவேல், ரங்கன், தங்கப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.