சிதம்பரத்தில் தீ விபத்து 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்


சிதம்பரத்தில் தீ விபத்து 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 5 Jun 2017 3:00 AM IST (Updated: 5 Jun 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் நடந்த தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது.

சிதம்பரம்,

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது 45). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில் அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க தண்ணீரை ஊற்றினர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதற்கிடையே மளமளவென எரிந்த தீ, அருகில் உள்ள பக்கத்து வீடுகளும் பரவியது.

4 கூரை வீடுகள் சாம்பல்

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் ராஜா, சிவகாமி, மஞ்சுளா, பாஸ்கர் ஆகிய 4 பேரது கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.1½ லட்சம் என கூறப்படுகிறது. மின்கசிவினால் இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.


Next Story