6 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் தகவல்


6 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் தகவல்
x
தினத்தந்தி 5 Jun 2017 3:30 AM IST (Updated: 5 Jun 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

6 ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தார்.

புதுச்சேரி,

6 ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தார். புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சொத்துக்கள் பறிமுதல்

புதுவையில் தொழில் அதிபர்களை மிரட்டி பிரபல தாதாக்களான மர்டர் மணிகண்டன், கர்ணா ஆகியோர் பணம் பறித்துள்ளனர். மேலும் ரியல் எஸ்டேட் அதிபர்களையும் மிரட்டி சொத்துகளை வாங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும், சொத்துகளை பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறையையும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

குண்டர் சட்டம்

6 ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிலர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய உள்ளோம்.

ரவுடி முரளி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தட்டாஞ்சாவடி செந்தில் தொடர்ந்து தலை மறைவாக உள்ளார். அவருக்கு கோர்ட்டும் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. அவரது சொத்துகளை முடக்கவும் காவல்துறை சார்பில் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தட்டாஞ்சாவடி செந்திலை பிடிக்க உதவுபவர்களுக்கு உரிய பரிசும் வழங்கப்படும்.

இவ்வாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:–

மணல் கொள்கை

புதுவையில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருவாய்த்துறை அதிகாரிகளும் பல கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பதிவான வழக்குகளை ஆய்வு செய்தபோது ஒருசில குறிப்பிட்ட நபர்களே இந்த மணல் கொள்ளையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. மாட்டுவண்டிக்காரர்களை பயன்படுத்தி மணலை எடுத்து வரச்செய்து பெரிய அளவில் கனிமவள கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கனிமவள கொள்ளையை தடுக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.


Next Story