நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு; தந்தை, மகன் கைது


நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு; தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 5 Jun 2017 2:43 AM IST (Updated: 5 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

கந்தம்பாளையம் அருகே உள்ள ஈ.நல்லாகவுண்டம்பாளையம் ஓடக்கருங்காட்டை சேர்ந்தவர் விவசாயி விஸ்வநாதன்(வயது44). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமிக்கும்(58) இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.

கந்தம்பாளையம்,

கந்தம்பாளையம் அருகே உள்ள ஈ.நல்லாகவுண்டம்பாளையம் ஓடக்கருங்காட்டை சேர்ந்தவர் விவசாயி விஸ்வநாதன்(வயது44). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமிக்கும்(58) இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் பொன்னுசாமி, அவரது மனைவி பாப்பாத்தி(52), மகன்கள் பாலசுப்பிரமணி(30), சோமு(26) ஆகியோர் சேர்ந்து விஸ்வநாதனை அரிவாளால் வெட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த விஸ்வநாதன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமி, அவரது மகன் பாலசுப்பிரமணி ஆகியோரை கைது செய்தனர். பாப்பாத்தி, சோமு ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story