சாதனை விளக்க கண்காட்சியில் பிரதமர் மோடி பேனர் கிழிப்பு
சாதனை விளக்க கண்காட்சியில் பிரதமர் மோடி பேனர் கிழிப்பு போலீசார் விசாரணை
மதுரை,
மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சியில் பிரதமர் மோடியின் பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாதனை விளக்க கண்காட்சிமதுரை மருத்துவக்கல்லூரியில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி நடைபெற்றது. இதனை கடந்த 2–ந்தேதி மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் போன்றவற்றின் விளக்க குறிப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் பிரதமர் மோடியின உருவப்படம் பொறித்த பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு வந்த மர்ம மனிதர்கள் பேனரில் இருந்த மோடியின் உருவப்படத்தை மட்டும் கிழித்து சேதப்படுத்தி சென்றனர். இதுகுறித்து மதிச்சியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டனம்பேனர் கிழிக்கப்பட்டதை பாரதீய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சசிராமன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கும் வகையில், கண்காட்சிகள் சென்னை மற்றும் மதுரையில் நடந்து வருகிறது.
10 பேர் கொண்ட கும்பல் காவலாளியை தாக்கிவிட்டு மோடியின் பேனரை கிழித்து சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. கோழைத்தனமான இந்த செயலை செய்தவர்களை போலீசார் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் நிகழ்ச்சிக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்க தவறி விட்டது. இது மிகவும் வேதனையான விஷயமாகும் என்றார்.