வாடிப்பட்டி பகுதியில் வண்டல் மண் எடுக்க 14 விவசாயிகளுக்கு உத்தரவு


வாடிப்பட்டி பகுதியில் வண்டல் மண் எடுக்க 14 விவசாயிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 5 Jun 2017 3:15 AM IST (Updated: 5 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஏரி, குளம், கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஏரி, குளம், கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஆர்.டி.ஓ. பழனிக்குமார் தலைமை தாங்கி விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கான உத்தரவு நகல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராமநாதன் முன்னிலை வகித்தார். தாசில்தார் வீரபத்திரன் வரவேற்றார். மண்டல துணை தாசில்தார் நாகேந்திரன், துணை தாசில்தார் கமலேஷ், தேர்தல் பிரிவு தாசில்தார் மணிமேகலை, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பிரகாஷ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பாலமேடு சாத்தையாறு அணையில் வண்டல் மண் அள்ள 7 பேருக்கும், சோழவந்தான் வடகரை கண்மாயில் ஒருவருக்கும், போடிநாயக்கன்பட்டி வடுகர்கண்மாயில் 6 விவசாயிகளுக்கும் உத்தரவு வழங்கப்பட்டன. அதேபோல் இலவச வீட்டு மனைபட்டா 22 பேருக்கும், பட்டா மாறுதல் 18 பேருக்கும், பட்டா உட்பிரிவு 24 பேருக்கும் வழங்கப்பட்டன.


Next Story