963 பசுமைவீடுகள் கட்ட ரூ.20¼ கோடி ஒதுக்கீடு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் 963 பசுமைவீடுகள் கட்ட ரூ.20 கோடியே 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று காரிமங்கலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் நடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 174 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் ரூ.3 கோடியே 65 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
நிதி ஒதுக்கீடு
விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் 963 பசுமை வீடுகள் கட்ட ரூ.20 கோடியே 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக காரிமங்கலம் பேரூராட்சியில் 174 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் குழாய், பல்நோக்கு மைய கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி என பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
காரிமங்கலம் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 32 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான முறையில் பிரசவம் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
பல்நோக்கு மையம்
முன்னதாக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து காரிமங்கலம் பேரூராட்சியில் காட்டுசீகலஅள்ளியில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிக்கு ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் கூடுதல் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். பின்னர் பந்தாரஅள்ளி ஊராட்சி கரகப்பட்டியில் ரூ.6 லட்சத்து 18ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு மையத்தை திறந்து வைத்து விலையில்லா அரிசி, சர்க்கரை மற்றும் உணவு பொருட்களை வழங்கினார்.
இந்த விழாவில் பாலக்கோடு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.அரங்கநாதன், கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க தலைவர் பழனிச்சாமி, பால்வள துணைத்தலைவர் பெரியசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கர் உள்பட துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story