பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Jun 2017 3:45 AM IST (Updated: 5 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பேராசிரியர் வீட்டில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவகல்லூரி சாலையில் உள்ள மங்களபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது40). இவர் தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வெளியூரில் இருக்கும் தனது தாயாரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6½ பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்றது தெரிய வந்தது. திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இது குறித்து ராஜன் தஞ்சை மருத்துவகல்லூரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story