பெரும்பிடுகு மன்னருக்கு சிலை நிறுவ வேண்டும் முத்தரையர் மாநாட்டில் தீர்மானம்
தஞ்சையில் பெரும்பிடுகு மன்னருக்கு சிலை நிறுவ வேண்டும் என்று முத்தரையர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் அனைத்து முத்தரையர் அமைப்புகளின் சார்பில் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி முத்தரையர் எழுச்சி மாநாடு நேற்று நடந்தது. முத்தரையர் உறவுப்பாலம் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். வீரத்தமிழர் எழுச்சி பேரவை பொதுச் செயலாளர் சந்திரகாசன், மதுரையை சேர்ந்த பாலன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில செயலாளர் மாதேவி குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
வீரமுத்தரையர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்வக்குமார், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவரின் மகன் பாலமுருகன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்க தலைவர் மூர்த்தி மாநாட்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தீர்மானம்
மாநாட்டில், தஞ்சை நகரை கி.பி. 6-ம் நூற்றாண்டில் நிர்மானித்து தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்கு தஞ்சையில் சிலை நிறுவி அரசு விழாவாக தமிழகஅரசு எடுக்க வேண்டும். திருக்காட்டுப்பள்ளி அருகே பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் முத்தரையர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் எம்.ஜெ.டி.எம்.கே. மாவட்ட செயலாளர் சந்திரஹாசன் முத்தரையர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் முத்தரையர் உறவுப்பாலம் பொதுச் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story