சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் ஒருவர் பலி 6 பேர் படுகாயம்
துவரங்குறிச்சி அருகே சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
மணப்பாறை,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் ஒரு காரில் 10 பேர் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை சிவகாசியை சேர்ந்த மாசாணம்(வயது 65) என்பவர் ஓட்டினார். காரில் மாசாணத்தின் மனைவி பேச்சியம்மாள் (55), அவர்களது மகள் முத்துக்கண்ணு (20), மகன் பாண்டியராஜன் (25), உறவினர்கள் ராஜலெட்சுமி (28), ராஜலெட்சுமியின் மகள் யாழினி (4), வேல்முருகன் (50), அவரது மனைவி ஜான்சிராணி (47), அய்யனார் (52), மணிகண்டன் (34) ஆகியோர் இருந்தனர். அந்த கார் நேற்று அதிகாலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்பட்டி அருகே உள்ள ஒரு திருப்பத்தில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
ஒருவர் பலி
இந்த விபத்தில் மாசாணம் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மாசாணம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story