நெடுவாசலில் பொதுமக்கள் 54-வது நாளாக போராட்டம்

வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், நெடுவாசலில் நேற்று 54-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய 11 பேரை போலீசார் செய்தனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Tags :
Next Story