உப்பள்ளியில் திருட்டு வழக்குகளில் 2 வாலிபர்கள் கைது ரூ.6½ லட்சம் நகைகள்–வெள்ளி பொருட்கள் பறிமுதல்

உப்பள்ளியில் திருட்டு வழக்குகளில் 2 வாலிபர்கள் கைது ரூ.6½ லட்சம் நகைகள்–வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jun 2017 3:02 AM IST (Updated: 5 Jun 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.6.50 லட்சம் தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

உப்பள்ளி,

உப்பள்ளியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.6.50 லட்சம் தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தனிப்படை அமைப்பு

உப்பள்ளி டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்மநபர்கள் நகைகள், பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கேசுவாப்பூர் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

2 பேர் கைது

விசாரணையில், அவர்கள் கெக்கேரி மாருதிநகர் பகுதியை சேர்ந்த ரபீக்(வயது 28), அஸ்லாம்(25) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து உப்பள்ளி டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகள், வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.6.50 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேசுவாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story