மந்திரி ராம் ஷிண்டேவுக்கு கூடுதல் பொறுப்பு
மாநிலத்தில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனை கருத்தில் கொண்டு, மராட்டிய மந்திரி சபையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உருவாக்கப்பட்டது.
மும்பை,
மாநிலத்தில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மராட்டிய மந்திரி சபையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உருவாக்கப்பட்டது. மராட்டிய மந்திரி சபையில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மந்திரி பதவி தற்போது ஏற்கனவே மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் ராம் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நெருக்கமானவராக கருதப்படும் ராம் ஷிண்டே மாநில நீர்வளத்துறை மந்திரியாக பதிவு வகித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கூடுதல் பொறுப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.
Related Tags :
Next Story