கண்காணிப்பு கேமராவை மேல் நோக்கி திருப்பி விட்டு கடையில் திருட்டு


கண்காணிப்பு கேமராவை மேல் நோக்கி திருப்பி விட்டு கடையில் திருட்டு
x
தினத்தந்தி 5 Jun 2017 3:45 AM IST (Updated: 5 Jun 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

கண்காணிப்பு கேமராவை மேல் நோக்கி திருப்பி விட்டு கடையில் இருந்த வயர்கள் திருடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி பஜாரில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருபவர் வின்சென்ட் (வயது 37). இவரது வீடு ரெட்டம்பேடு சாலையில் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்த வின்சென்ட் கடையின் முன்பக்க வரண்டாவில் இருந்த தாமிர வயர்கள் மற்றும் அலுமினிய வயர்கள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நள்ளிரவில் பின்பக்கம் உள்ள மாடி வழியாக ஏறி குதித்து படி வழியாக கடையின் கீழ்தளத்திற்கு வந்த மர்ம நபர்கள் அங்கு உள்பக்கமாக உள்ள ‌ஷட்டர் பூட்டைநெம்பினர். அந்த வழியாக கடையின் முன்பக்க வரண்டாவுக்குள் புகுந்துள்ளனர். அங்கு இருந்த 450 மீட்டர் நீளம் கொண்ட விலை உயர்ந்த தாமிர வயர்கள் மற்றும் அட்டை பெட்டியில் இருந்த அலுமினிய வயர்களையும் திருடிச்சென்று உள்ளனர்.

போலீசார் விசாரணை

அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை மேல் நோக்கி திருப்பி வைத்து விட்டு மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடையில் நுழைந்த மர்ம நபர்களில் ஒருவரது உருவம் மட்டும் மேற்கண்ட கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.


Next Story