சென்னையில் இருந்து மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி தந்தை, மகன் கைது
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு 13 கிலோ போதைப்பொருள் கடத்த முயற்சி தந்தை, மகன் கைது
ஆலந்தூர்,
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 13 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தந்தை, மகன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள்சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மலேசியா செல்லும் விமான பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் ஏற வந்த சென்னையை சேர்ந்த உஸ்மான் (வயது 61), அவருடைய மகன் ரகுமான் (36) ஆகியோர் சோதனைகளை முடித்துக்கொண்டு உடைமைகள் விமானத்தில் ஏற்றப்பட்டதை கண்டுபிடித்தனர். அதை இறக்கி சோதனை செய்தபோது அதில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
தந்தை, மகன் கைதுஅதில் இருந்த 13 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் உஸ்மான், ரகுமான் ஆகியோரின் விமான பயணத்தை ரத்து செய்தனர். பின்னர் சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு அவர்களை அழைத்து சென்றனர்.
இந்த கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் எந்த வகையை சேர்ந்தது எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.