மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடந்த ஜமாபந்தியில் மனுக்கள் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடந்த ஜமாபந்தியில் மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகா அலுவலகங்களிலும் கடந்த 1-ந் தேதி முதல் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்தியில் அந்தந்த குறுவட்டம் வாரியாக பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்து வருகின்றனர்.
ஜமாபந்தி நடைபெறுவதையொட்டி வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் ஜமாபந்தி முடியும் வரை நடைபெறாது என்று மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வராமல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்ச்சியிலேயே மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் திங்கட்கிழமைதோறும் மிகவும் பரபரப்பாக காணப்படும் கலெக்டர் அலுவலகம் நேற்று மக்கள் நடமாட்டம் குறைந்து மிகவும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. ஒரு சிலர் மட்டுமே மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்களுக்கு வசதியாக கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகில் புகார் மனுக்கள் செலுத்தும் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த பெட்டியில் மனுக்களை போட்டனர்.
மக்கள் குவிந்தனர்
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனுக்களை கொடுக்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். இவர்கள் அனைவரையும் தாலுகா அலுவலக ஊழியர்கள் வரிசையில் ஒழுங்குப்படுத்தி வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனு கொடுக்க வழிவகை செய்தனர். விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று 400-க்கும் மேற்பட்ட மக்கள் மனு கொடுக்க வந்தனர். இதேபோல் மற்ற தாலுகா அலுவலகங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

Related Tags :
Next Story