‘காடுகளை பாதுகாத்தால்தான் மனிதன் நிம்மதியாக மூச்சுவிட முடியும்’
‘காடுகளை பாதுகாத்தால்தான் சுகாதாரமான காற்றை பெற்று மனிதன் நிம்மதியாக மூச்சுவிட முடியும்‘ என்று தலைமை வனபாதுகாவலர் வெங்கடேஷ் கூறினார்.
நெல்லை,
களக்காடு முண்டந்துறை புலிகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் நெல்லை மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை இணைந்து ‘இயற்கையுடன் மக்களை இணைத்தல்‘ என்ற தலைப்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கருத்தரங்கத்தை மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று நடத்தியது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனரும், தலைமை வன பாதுகாவலருமான வெங்கடேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
காடுகளை பாதுகாத்தால்தான்...
உலகில் எங்கு பார்த்தாலும் தற்போது கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன் கலந்த காற்று தான் காணப்படுகிறது. இதனால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன் ஆகியவற்றின் தாக்கத்தை குறைக்க வேண்டுமானால் காடுகள், மண், கடல் ஆகியவற்றால் தான் முடியும். எனவே காற்றையும், மண்ணையும், கடலையும் பாதுகாக்க வேண்டும்.
இதன்மூலம் தான் நாம் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். காடுகளை பாதுகாத்தால் தான் அதன்மூலம் கிடைக்கும் சுத்தமான காற்றை பெற்று மனிதனால் நிம்மதியாக மூச்சுவிட முடியும். இதை நாம் உணர்ந்து காடுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கவேண்டும்.
புலிகள் சரணாலயம்
1962-ம் ஆண்டு முண்டந்துறை புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. 1976-ம் ஆண்டு முதல் களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த புலிகள் காப்பகத்தில் தற்போது 2 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகளை அதிகப்படுத்தி வனத்தை பாதுகாத்து வருகிறோம்.
இந்த வனப்பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பை சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள 228 வனக்குழுவினருக்கு ரூ.16 கோடி வரை கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் 99 சதவீதம் கடனை திருப்பி செலுத்தி உள்ளனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன். இந்த வனக்குழுவினரும், கிராம மக்களும் வன உயிரினங்களையும், மரங்களையும் பாதுகாக்க வேண்டும். அகத்தியமலை வனபாதுகாப்பு திட்டம் கன்னியாகுமரி முதல் குமுளி வரை 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 200 வனக்குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
200 சட்டங்கள்
விழாவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராமலிங்கம் பேசுகையில், அந்த காலத்தில் மக்கள் வனத்தை சார்ந்தே வாழ்ந்தனர். இதனால் தங்களுக்கு வனத்தை சார்ந்த பெயரையே வைத்து இருந்தனர். மக்கள் இயற்கையை பாதுகாத்தால் அது மக்களை பாதுகாக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்க 200 சட்டங்கள் உள்ளன. சட்டங்கள் இருந்தாலும் மனிதர்கள் மன மாற்றம் அடைந்தால் தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.
இயற்கை உணவை சாப்பிடுங்கள். விவசாயத்திற்கு செயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணின் தன்மையை கெடுத்து விடாதீர்கள். இயற்கை உரங்களை பயன்படுத்தினால் வேளாண்மை செழிக்கும். காடுகளை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலை பேணி காக்கவேண்டும். இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும் என்றார்.
விழாவில் மாவட்ட அறிவியல் மைய அலுவலர் நவராம்குமார், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர்கள் ஜெயராஜ், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story