துப்பாக்கியுடன் பயணம் செய்தவர் கைது தப்பி ஓடிய 4 பேர் எங்கே? போலீசார் தேடுதல் வேட்டை
களியக்காவிளை அருகே கேரள அரசு பஸ்சில் துப்பாக்கியுடன் பயணம் செய்தவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 4 பேர் எங்கே? என்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே கேரள பகுதியான அமரவிளை சோதனை சாவடியில் கடந்த 3-ந் தேதி இரவு கேரள போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள அரசு பஸ்சை நிறுத்தி பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் பையில் கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பிரவீன் ராஜ் (வயது 24) என்றும், நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது. அவரிடம் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் மற்றும் வேறு எந்தவொரு ஆவணமும் இல்லை என கண்டறியப்பட்டது. தொடர்ந்து, பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்ராஜை கைது செய்தனர். மேலும் துப்பாக்கி, தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.
கொலைக்கு பழி வாங்க
தொடர்ந்து, எதற்காக துப்பாக்கியுடன் கேரளாவுக்கு செல்ல முயன்றார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரவீன் ராஜ் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 2 பிரிவினரிடையே பல ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. இந்தநிலையில் எங்கள் தரப்பை சேர்ந்த ஒருவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எதிர் தரப்பினர் கொலை செய்து விட்டனர். எனவே, அவர்களை பழிக்குப்பழி வாங்க நாங்கள் திட்டமிட்டோம்.
அப்போது, கொலையாளிகள் நெல்லையில் இருந்து தப்பிச்சென்று திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்களை பழிவாங்க நானும் மேலும் 4 பேரும் ஒரு பையில் துப்பாக்கி, தோட்டாக்களை மறைத்து வைத்து கொண்டு கார் மூலம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டோம்.
போலீசார் சோதனை
அமரவிளை சோதனை சாவடியை எங்கள் கார் நெருங்கிய போது போலீசார் அந்த வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்வதை பார்த்தோம். உடனே, நானும் இன்னொருவரும் மட்டும் காரில் இருந்து இறங்கி அந்த வழியாக வந்த கேரள அரசு பஸ்சில் ஏறினோம். பஸ்சில் போலீசார் சோதனை நடத்த மாட்டார்கள் என எண்ணினோம்.
ஆனால், போலீசார் பஸ்சிலும் சோதனை நடத்தி என்னை கைது செய்தனர். என்னுடன் வந்தவரை நான் போலீசில் காட்டி கொடுக்காததால் அவர் நைசாக தப்பி சென்று விட்டார்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், பிரவீன்ராஜை போலீசார் நெய்யாற்றின்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். பிரவீன் ராஜ் கூறிய தகவல்படி அவருடன் வந்த மேலும் 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற திருவனந்தபுரத்திற்கு சென்றார்களா? அல்லது போலீசில் சிக்காமல் இருக்க மீண்டும் நெல்லைக்கே சென்று விட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story