சாராய விற்பனையை ஒழிக்கக்கோரி கலெக்டர் மேஜையில் சாராய பாக்கெட்டுகளை வைத்த பெண்கள்
சாராய விற்பனையை ஒழிக்கக்கோரி கலெக்டர் மேஜையில் சாராய பாக்கெட்டுகளை பெண்கள் வைத்ததால் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சோளிங்கர் ரெண்டாடி பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள் நுழைந்த அவர்கள் திடீரென பையில் வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளை எடுத்து கலெக்டரிடம் காண்பித்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சாராய பாக்கெட்டுகளை பிடுங்க முயன்றனர். அப்போது பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கலெக்டர் மேஜையில்...
இதனையடுத்து அதிகாரிகள், பெண்களிடம் பேசி சமரசம் செய்தனர். பின்னர் அவர்கள், சாராய பாக்கெட்டுகளை கலெக்டர் அமர்ந்திருந்த மேஜையின் மீது வைத்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் சாராய விற்பனை படுஜோராக நடக்கிறது. குறிப்பாக, அங்கு வசிக்கும் 2 குடும்பத்தினர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்கிறார்கள். இதனால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசாரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கலெக்டர் மேஜையில் சாராய பாக்கெட்டுகளை பெண்கள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் கோரிக்கை
நெமிலி தாலுகா சிறுவளையம், பள்ளிப்பட்டறை, லட்சுமிபுரம், ராமாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அளித்துள்ள மனுவில், ‘விவசாயிகளான நாங்கள் நெமிலி தாலுகாவில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல், கரும்பு பயிர்களை பயிரிட்டு பராமரித்து வந்தோம்.
பருவமழை பொய்த்து விட்டதால் தண்ணீரின்றி பயிர்கள் கருகியது. இதனால் நாங்கள் மிகவும் நஷ்டமடைந்துள்ளோம். கருகிய பயிர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்துள்ள மனுவில், பேரணாம்பட்டு பகுதியில் சாராய விற்பனை அதிகளவு நடக்கிறது. சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரணாம்பட்டை அடுத்த டி.டி.மோட்டூர் பகுதியில் ஏரியில் இருந்து விவசாய தேவைக்களுக்காக வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், முறைகேடாக செங்கல் சூளைக்கும், கட்டுமான பணிகளுக்கும் மண் அள்ளிச் செல்லப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். பத்ரப்பல்லி, மதனப்பல்லி கொட்டாற்றில் மணல் கடத்தல் நடக்கிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் குறைகிறது. மணல் கடத்தலை தடுக்க வேண்டும்’ என்று அதில் கூறியிருந்தனர்.
சுடுகாடு வேண்டும்
ஆலங்காயம் பேரூராட்சி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயபால் கொடுத்துள்ள மனுவில், ஆலங்காயம் பேரூராட்சியில் 12-வது வார்டில் போயர் இன மக்கள் சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் புல்லான் ஏரியில் ஒரு பகுதியை சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். தற்போது ஏரிக்கு தண்ணீர் வரத்து காரணமாக இந்த சுடுகாட்டை பயன்படுத்த முடியவில்லை. இப்பகுதி மக்களுக்கு வேறு சமுதாய மக்கள் பயன்படுத்தும் கடுகாட்டை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, இப்பகுதி மக்களுக்கு திருப்பத்தூர் ரோட்டில் பெரிய ஏரியில் ஒரு இடத்தை சுடுகாடு பயன்பாட்டிற்காக ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story