நரிமேடு பகுதியில் இலவச வீடு கட்டித்தர கோரி திருநங்கைகள் மனு
புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் இலவச வீடு கட்டித்தர கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநங்கைகள் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் அன்னவாசல் பகுதியை சேர்ந்த வாசுகி கொடுத்த மனுவில், நான் புதுக்கோட்டையில் உள்ள ஒரு காதி கிராம தொழில் வாரியத்தில் கடந்த 8.6.2010 அன்று விற்பனை முகவராவதற்கு ரூ.10 ஆயிரத்தை வைப்பு தொகையாக செலுத்தினேன். ஆனால் விற்பனை முகவராக நான் செயல்படவில்லை. இதனால் இந்த வைப்பு தொகையை பல முறை கேட்டு வருகிறேன். ஆனால் என்னுடைய பணத்தை திருப்பி தர மறுக்கின்றனர். எனவே தகுந்த நடவடிக்கை எடுத்து வைப்பு தொகையை பெற்று தர வேண்டும், என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
100 நாள் வேலை திட்டம்
இதேபோல பொன்னம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், பொன்னம்பட்டியில் வசித்து வரும் நாங்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி பயனடைந்து வந்தோம். இந்நிலையில் எங்கள் ஊரை புதுக்கோட்டை நகராட்சி 42-வது வார்டுடன் இணைத்தபிறகு எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.
திருநங்கைகள் மனு
ஹசினா தலைமையில் திருநங்கைகள் கொடுத்த மனுவில், நாங்கள் பல வருடங்களாக வாடகை வீடுகளில் குடியிருந்து வருகிறோம். இதனால் நாங்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறோம். எனவே எங்களுக்கு புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இலவசமாக வீடுகள் கட்டி தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தனர்.
நாகர்கோவிலை சேர்ந்த ரேணுகா கொடுத்த மனுவில், விராலிமலை ஒன்றியத்தில் கடந்த 14.12.2009 முதல் முத்துகவுண்டர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணி செய்தேன். 21.8.2016 அன்று கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல் பெற்று தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறேன். இதுவரை என்னுடைய பணி பதிவேடு என்ன ஆனது என்று தெரியவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.
மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி நட வடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Tags :
Next Story