மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்
சித்தளி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சித்தளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் பங்களிப்புடன் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு போட்டும் வழிபாடு நடத்தினர்.
தேரோட்டம்
அதை தொடர்ந்து நேற்று காலை மாரியம்மனுக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப் பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மாரியம்மன் திருத் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நாதஸ்வர இசை, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கம்பீரமாக வீதியில் பவனி வந்தது. முக்கியமான நான்கு வீதி வழியாக பக்தர்கள் படை சூழ தேர் அசைந்து ஆடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று மாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்த டைந்தது. இதில் குடிக்காடு, கருகுடி, ஆண்டி குரும்பலூர், குன்னம், பேரளி, வேப்பூர், மருவத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story