டாஸ்மாக் கடையை மூடக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
எருதுகாரன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்டம் எருதுகாரன்பட்டி, அண்ணாநகர் செல்லும் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு அருகே 2 தனியார் பள்ளிகள், ஒரு மருத்துவமனையும் அமைந்துள்ளன. இங்கு டாஸ்மாக் கடை உள்ளதால் மதுஅருந்துபவர்கள் குடித்து விட்டு அங்கேயே படுத்து கொள்கின்றனர். மேலும் தகாத வார்த்தை பேசி தகராறு செய்கின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் அந்த வழியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் டாஸ்மாக் கடைக்கு மதுஅருந்த வருபவர்கள் ரோட்டிலேயே அமர்ந்து குடித்து விட்டு சிலர் பாட்டில்களை அங்கே உடைத்தும் செல்கின்றனர். மேலும் அவர்கள் குடித்து விட்டு போட்டு விட்டு செல்லும் தண்ணீர் பாக்கெட்டுகளால் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அந்த டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுநாள் வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆர்ப்பாட்டம்
இதையடுத்து எருதுகாரன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அரியலூரில் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். அப்போது இன்னும் 15 தினத்திற்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் கூறினர். இதில் எருதுகாரன்பட்டி முன்னாள் தலைவர் சிவா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பினர்.

Related Tags :
Next Story