ஊராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்
திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பெயர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மக்களுக்கு ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த கிராமத்தில் சுமார் 20 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஆழ்குழாய் கிணறும் தற்போது உப்புநீராக மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிக தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வர அதிக நேரம் செலவிட வேண்டி இருப்பதாகவும், இதனால் மற்ற வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் தெரிவித்தும் இதுநாள் வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கோதை, வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் உப்பு நீராக வரும் ஆழ்குழாய் கிணற்றை சீரமைத்து தரப்படும் என்றும், மேலும், அரசிடம் அனுமதி பெற்று புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியதையடுத்து கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story