தலைக்கு தேய்க்கும் எண்ணெயை குடித்த 1½ வயது குழந்தை சாவு ஊத்தங்கரை அருகே பரிதாபம்


தலைக்கு தேய்க்கும் எண்ணெயை குடித்த 1½ வயது குழந்தை சாவு ஊத்தங்கரை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 6 Jun 2017 9:57 AM IST (Updated: 6 Jun 2017 9:57 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே தலைக்கு தேய்க்கும் எண்ணெயை குடித்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பெருமாள். தொழிலாளி. இவருடைய மனைவி சென்னம்மாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வேதன் (வயது 1½) என்ற ஆண் குழந்தையும் இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வேதன் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தான்.

அப்போது வீட்டில் இருந்த தலைக்கு தேய்க்கும் எண்ணெயை எடுத்து அவன் குடித்தான். பின்னர் சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளி வேதன் மயங்கி கிடந்தான்.

பரிதாப சாவு

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், வேதனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேதன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story