டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராட்டம்


டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2017 3:30 AM IST (Updated: 6 Jun 2017 11:26 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அல்லம்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராட்டம்

 

விருதுநகர்,

விருதுநகர் அல்லம்பட்டியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள். நேற்றும் அவர்கள் கடை முன்பு அமர்ந்து அதனை அகற்ற கோரி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த தாசில்தார் செய்யது இப்ராகிம் பேச்சு வார்த்தை நடத்தினார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story