பாவூர்சத்திரம் அருகே குடிக்க பணம் கேட்பவர்களை துடப்பத்தால் அடிக்கும் நூதன போராட்டம்


பாவூர்சத்திரம் அருகே குடிக்க பணம் கேட்பவர்களை துடப்பத்தால் அடிக்கும் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2017 2:15 AM IST (Updated: 7 Jun 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்யும் ஆண்களை துடப்பத்தால் அடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று, குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்யும் ஆண்களை துடப்பத்தால் அடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி...

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி திப்பணம்பட்டி, திப்மீனாட்சிபுரம், கொண்டலூர், பூவனூர், ஆரியங்காவூர், நாட்டார்பட்டி, மலையராமபுரம் உள்ளிட்ட பகுதிகளை சோர்ந்த பொதுமக்கள் 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டடத்தின் முதல் நாளில் மதுக்கடையை முற்றுகையிட்டும் அங்கேயே பந்தல் போட்டு சமையல் செய்து சாப்பிட்டும், அடுத்த நாள் மதுபாட்டில்களுக்கு தாலி கட்டி ஒப்பாரி வைத்தும், 3–வது நாள் பாடை கட்டி கொள்ளிகுடம் உடைத்தும், 4–வது நாள் மணப்பந்தல் அமைத்து ஆணுக்கு ஆண் தாலி கட்டியும், 5–வது நாளன்று பெண்கள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியும் நூதன போராட்டங்கள் நடத்தினர்.

துடப்பத்தால் அடிக்கும் போராட்டம்

இந்த போராட்டம் நேற்று 6–வது நாளாக நீடித்தது. மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்யும் ஆண்களை துடப்பத்தால் அடிப்பது போன்ற போராட்டமும், மதுக்கடை முன்பு அமர்ந்து மதுகுடிப்பவர்களை விரட்டுவது போன்ற போராட்டமும் நடத்தினர்.

6 நாட்கள் ஆகியும் கடையை திறக்க விடாமல் போராட்டம் நடத்துவதாலும், அதிகாரிகள் பேச்சு வார்த்தை தோல்வியுற்றதாலும் போராட்டகாரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story