‘என் உயிருக்கு ஆபத்து’ ராக்கெட் ராஜா வாட்ஸ்-அப் தகவலால் பரபரப்பு
‘என் உயிருக்கு ஆபத்து’ என்று ராக்கெட் ராஜா வாட்ஸ்-அப் தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நெல்லை,

ராக்கெட் ராஜா
நாடார் மக்கள் சக்தி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா வாட்ஸ்-அப்பில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என் மீது எந்த வழக்கும் இல்லாத நிலையில் பொய் வழக்கு போட்டு என்னை போலீசார் சுட்டுக்கொல்ல முயற்சி செய்கிறார்கள். போலீசார் என்னை நெருங்கி விட்டனர். சுற்றி வளைத்து விட்டனர். ஒரு தூதுவரை என்னிடம் அனுப்பி என்னை சரண் அடையுமாறு கூறினார்கள். ஆனால் நான் சரண் அடைந்தாலும் என்னை சுட்டுக்கொன்று விடுவார்கள் என்று என்னிடம் தூது வந்தவரே தெரிவித்தார்.
இதுவே எனது கடைசி வாக்குமூலமாக கூட இருக்கலாம். என்னை போலீசார் முறையாக கைது செய்தால் நான் நேரில் வந்து சந்திக்கிறேன். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு முழுக்க, முழுக்க நெல்லை மாவட்ட போலீசாரே காரணம் என்பதை இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த வாட்ஸ்-அப் தகவலில் அவர் கூறியுள்ளார்.
நாடார் சங்கம்
இந்த நிலையில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.சபாபதி நாடார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடார் மக்கள் சக்தி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜாவை சுட்டுக்கொல்ல போலீசார் தீவிரமாக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் நடவடிக்கைகளால் நாடார் சமுதாயம் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளது.எங்கள் சமுதாயத்திற்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை முதல்-அமைச்சர் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுகிறோம். இல்லையெனில் தமிழக அரசை கண்டித்தும், தமிழக காவல்துறையை கண்டித்தும் தலைநகர் சென்னையிலும், நெல்லையிலும் தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டி.ஜி.பி.யிடம் மனு
நெல்லை மாவட்டம் ஆனைகுடி நாடார் சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் தலைவர் பாலகணேசன், செயலாளர் ராஜாமோகன்சிங், பொருளாளர் வீரக்குமார் ஆகியோர் சென்னையில் டி.ஜி.பி.யை சந்தித்து ஒரு மனு கொடுத்து உள்ளனர்.
அதில், எங்கள் ஊரை சேர்ந்த ராக்கெட் ராஜாவை, போலீசார் சுட்டுக்கொல்ல போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதுபோல் கடந்த 3-ந்தேதி முதல் தினமும் இரவு, பகல் பாராமல் வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் திசையன்விளை போலீசார் எங்கள் ஊரில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரையும் தேவையில்லாமல் துன்புறுத்துகிறார்கள். எனவே எங்களுக்கு போலீசார் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக இருப்பதற்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் ராக்கெட் ராஜா மீது எழுந்துள்ள என்கவுன்ட்டர் புகாரை தடுத்து நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story