மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் மாநில சங்க தேர்தல்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் மாநில சங்க தேர்தல் நடந்தது.
மதுரை,
தமிழ்நாடு நர்சுகள் மாநில சங்க தேர்தல் கடந்த 2–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் 5, 6–ந்தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் நைட்டிங்கேல் அணி, கலங்கரை விளக்கு அணி, ஜோதி அணி என 3 அணிகள் போட்டியிட்டன. தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், துணை பொருளாளர் உள்பட 19 பதவிகளுக்கு 75–க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.
320 பேர் வாக்களித்தனர்இங்கு வாக்குப்பதிவு காலை 7.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெற்றது. மதுரை அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தவரை 347 நர்சுகள் வாக்களிக்க தகுதியானவர்கள்.
இதில் 2 நாட்களாக நடந்து முடிந்த தேர்தலில் 320 வாக்குகள் பதிவானது. தேர்தல் நடைபெற்ற பகுதியில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடந்தமுறை நடந்த தேர்தலின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் கூறப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் நடைபெற்றாலும் இந்த தேர்தலிலும் சில விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறப்படுகிறது.