சுங்கச்சாவடி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்


சுங்கச்சாவடி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2017 4:15 AM IST (Updated: 7 Jun 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருமாந்துறை சுங்கச் சாவடி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கவரி வசூல் செய்யும் சுங்கச்சாவடி மையம் (டோல் கேட்) உள்ளது. இந்த சுங்கச் சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங் கள் சென்று வருகின்றன. இந்த சுங்கச்சாவடியில், சுங்கவரி வசூல் செய்யும் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணி புரியும் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை, ஊதிய உயர்வு வழங்க வேண்டியும், பணி பாதுகாப்பு கோரியும் கடந்த ஒருவார காலமாக கருப்பு பட்டை அணிந்து போராடி வருகின்றனர்.

போராட்டம்

இந்தநிலையில் இந்த கோரிக்கையை ஏற்காத நிர் வாகத்தை கண்டித்து தமிழ் நாடு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனி யன் சார்பில் சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு சுங்கவரி வசூல் செய்யும் பணியை புறக்கணித்து போராட்டத்தை தொடங் கினர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் இரு புறமும் செல்லும் வாகனங்கள் சுங்கவரி செலுத் தாமல் இலவசமாக சென்றன. திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் மங்களமேடு போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து மனு அளித்தனர். எங்கள் கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story