பெங்களூரு ஒகலிபுரம் ரோடு சந்திப்பில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் டிசம்பர் மாதத்தில் முடிவடையும்


பெங்களூரு ஒகலிபுரம் ரோடு சந்திப்பில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் டிசம்பர் மாதத்தில் முடிவடையும்
x
தினத்தந்தி 7 Jun 2017 2:30 AM IST (Updated: 7 Jun 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு ஒகலிபுரம் ரோடு சந்திப்பில் இருந்து பவுண்டைன் சர்க்கிள் வரைக்கும் சிக்னல் இல்லாத 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெங்களூரு,

பெங்களூரு ஒகலிபுரம் ரோடு சந்திப்பில் இருந்து பவுண்டைன் சர்க்கிள் வரைக்கும் சிக்னல் இல்லாத 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ரெயில்வே சுரங்க பாலம் நிறுவி புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கலந்து கொண்டு, கொடி அசைத்து அந்த சாலையை திறந்து வைத்து பேசியதாவது:–

ஒகலிபுரம் ரோடு சந்திப்பில் நடைபெற்று வரும் சிக்னல் இல்லாத 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். இந்த பணிகள் விரைவாக முடிய வேண்டும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறி வருகிறார். இதில் அவர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுகிறார். அவ்வப்போது இந்த பணிகள் குறித்த விவரங்களை அவர் கேட்டு பெறுகிறார். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகளை முடிக்கும்படி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் பேசினார்.

இந்த விழாவில் மேயர் பத்மாவதி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story