குடிநீர் வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்


குடிநீர் வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 7 Jun 2017 4:30 AM IST (Updated: 7 Jun 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் உள்பட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி 46-வது வார்டு இடையஞ்சாத்து, ராமலிங்கம் நகர், ஈஸ்வரத் தெரு, மலைதென்றல் தெரு, தந்தைபெரியார் தெரு உள்ளிட்ட பகுதிகளை கொண்டதாகும்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி சாலை விரிவாக்கம் செய்யும்போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இடையஞ்சாத்து உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காலி குடங்களுடன் அலுவலக வாசலில் அமர்ந்து குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி கமிஷனர் குமார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், எங்கள் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சரிவர குடிநீர் வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்று கொண்ட அவர், குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story