திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் சங்கர மட மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுதேசி மில் அருகே மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
உயர்நீதிமன்றத்தின் அறிவுரையின்படி, காஞ்சிபுரம் சங்கர மட மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுதேசி மில் அருகே மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழக மாநில தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அன்பெழிலன், ராசா, ஜான், சேவியர், தந்தைபிரியன், சிவானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story