இரு தரப்பினர் இடையே தகராறு; பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் சாலை மறியல்
தளிவாசல் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரகம்பட்டி,
கடவூர் ஒன்றியம், முள்ளிப்பாடி ஊராட்சி தளிவாசலில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பகவதியம்மன், பாம்பலம்மன் ஆகிய சாமிகள் தனித்தனியே சன்னதி கொண்டுள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து திருவிழா நடத்த அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடவூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரு தரப்பினரும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சாலை மறியல்
இதையடுத்து கோர்ட்டில் அனுமதி பெற்றதாக கூறப்படும் ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்து கரூர்- மணப்பாறை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாமணிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மனோகர், வருவாய் ஆய்வாளர் இளம்பருதி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களை மீண்டும் தாசில்தார் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோர்ட்டு நகல்களை சரிபார்த்தபின் கோவில் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கடவூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story