பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக் டர் சாந்தா தலைமையில் நடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தின் போது, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களால் அனுப்பப்பட்டுள்ள மனுக்கள், வாரந்தோறும் நடைபெறும் மாவட்ட கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சிறப்பு மனுநீதி நாள் நிகழ்ச்சிகளில் பொதுமக்களால் வழங்கப்படும் மனுக்கள் மீதும், அம்மா அழைப்பு மையம் மூலமாக வரப்பெற்றுள்ள கோரிக்கைகள் குறித்தும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.
மனுக்களை நிலுவையில் வைக்க கூடாது
பின்னர் மாவட்ட கலெக்டர் சாந்தா பேசுகையில்,
பொதுமக்கள் வழங்கும் அனைத்து மனுக்களின் விபரங்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு துறை அலுவலருக்கும் தனித்தனியே கடவு சொல் வழங்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறைக்கு பொதுமக்களால் வழங்கப்படும் எந்த ஒரு மனுவிற்கும் முறையாக பதிலளிக்க வேண்டும். பொதுமக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒரு மனுவையும் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்க கூடாது. உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் என்று கூறினார்.
அதிகாரிகள்
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மனோகரன், மகளிர்திட்ட அலுவலர் செல்வராசு உள்ளிட்ட வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story