இரவில் துணிகரம்: போலீஸ் ஏட்டு-காண்டிராக்டர் வீடுகளில் 28 பவுன் நகை-பணம் திருட்டு
சேலம் சின்னத்திருப்பதியில் ஒரேநாள் இரவில் போலீஸ் ஏட்டு, காண்டிராக்டர் வீடுகளில் 28 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கன்னங்குறிச்சி,
சேலம் சின்னத்திருப்பதி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். சேலம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் ஏட்டாக வேலைபார்த்து வருகிறார்.
யுவராஜ் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சென்றார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
காண்டிராக்டர் வீடு
யுவராஜ் வீட்டுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சிவகுமார். கட்டிட காண்டிராக்டர். இவர் தனது மனைவி லோகநாயகியுடன் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் வைத்திருந்த 23 பவுன் நகைகள், மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ஒரேநாள் இரவில் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த திருட்டுகள் குறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story