காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி அர்ச்சகர்கள் வேத மந்திரம் ஓத நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தங்க சப்பரத்தில் பெருமாள் தாயருடன் எழுந்தருளி வீதிஉலா வந்தார். மாலையில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று காலை ஹம்ச வாகனம், இரவு சூரிய பிரபை, நாளை காலை முக்கிய திருவிழாவான கருட சேவை திருவிழாவும் நடைபெறுகிறது. இரவு ஹனுமந்த வாகனம், 9–ந்தேதி காலை சேஷ வாகனம், இரவு சந்திர பிரபை, 10–ந்தேதி காலை தங்க பல்லக்கு, இரவு யாளி வாகனம், 11–ந்தேதி காலை தங்க சப்பரம், இரவு யானை வாகனத்தில் சாமி உலா வருதலும் நடைபெறுகிறது.
தேர் திருவிழா
12–ந்தேதி முக்கிய திருவிழாவான தேர் திருவிழா, 13–ந்தேதி தொட்டி திருமஞ்சனம், இரவு குதிரை வாகனம், 14–ந்தேதி தீர்த்தவாரி, இரவு புண்ணியகோடி விமானம், 15–ந்தேதி திவாதச ஆராதனை, இரவு வெட்டிவேர் சப்பரம் போன்ற விழாக்கள் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவிலின் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான விஜயன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story