உடுமலை, தாராபுரம், காங்கேயத்தில் இந்து முன்னணியினர் சாலை மறியல்
உடுமலை, தாராபுரம், காங்கேயத்தில் இந்து முன்னணியினர் சாலை மறியல் 76 பேர் கைது
தாராபுரம்,
இந்து மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து உடுமலை, தாராபுரம், காங்கேயத்தில் சாலை மறியல் செய்த இந்து முன்னணியினர் 76 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் காளை இறந்ததுதேனி மாவட்டம் கம்பம் நந்தகோபால் சாமி கோவில் பட்டத்து காளை நேற்று இறந்தது. இந்த காளைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தேனிக்கு சென்றார். அவருடன் மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கம்பத்திற்கு புறப்பட்டு செல்ல முயன்றனர்.
தேனி–பெரியகுளம் சாலையில் உழவர் சந்தை நுழைவு வாயில் அருகே அவர்கள் வந்த காரை போலீசார் நிறுத்தினர். கம்பத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாகவும் இந்த சூழ்நிலையில் கம்பத்திற்கு செல்ல அனுமதிக்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கைதுதாங்கள் கோவிலுக்கு காளைக்கு அஞ்சல் செலுத்தி விட்டு திரும்ப அனுமதி அளிக்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர். தாங்கள் கோவில் காளைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி வந்துவிடுவோம் என்று இந்து முன்னணி அமைப்பினர் கூறினார்.
ஆனால் போலீசார் தொடர்ந்து அனுமதி மறுத்ததால் இந்து முன்னணியை சேர்ந்த சிலர் போலீசாரை கண்டித்து சாலை மறியல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலைஇதனைக்கண்டித்து திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ்நிலையம் முன்பு இந்து முன்னணியினர் நேற்று மாலை திடீர்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை போலீசார் மத்திய பஸ்நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர். ஆனால் இந்து முன்னணியினர் அங்கு வராமல் அந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்துமுன்னணியினர் 27 பேரை கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
தாராபுரத்தில்இதேபோல் தாராபுரத்தில் இந்து முன்னணியினர் சார்பில் சாலைமறியல் நடைபெற்றது. சாலை மறியலுக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாலை மறியல் தாலுகா ஆபீஸ் ரோட்டில் நடைபெற்றதால், அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தாராபுரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டிருந்த 31 பேரை கைது செய்து, அருகே இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
காங்கேயம்இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தேனியில் போலீசாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மாலை காங்கேயம் பஸ்நிலையம் முன்பு இந்து முன்னணி மாவட்டசெயற்குழு உறுப்பினர் சதீஸ்குமார் தலைமையில் சாலை மறியல் செய்த 18 பேரை காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.