விவசாயிகளின் வலி எரிமலைக்குழம்பு, பா.ஜனதாவுக்கு அழிவை ஏற்படுத்தும் சிவசேனா எச்சரிக்கை


விவசாயிகளின் வலி எரிமலைக்குழம்பு, பா.ஜனதாவுக்கு அழிவை ஏற்படுத்தும் சிவசேனா எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2017 3:09 AM IST (Updated: 7 Jun 2017 3:09 AM IST)
t-max-icont-min-icon

‘‘விவசாயிகளின் வலி எரிமலைக்குழம்பு, பா.ஜனதாவுக்கு அழிவை ஏற்படுத்தும்’’ என்று சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை,

‘‘விவசாயிகளின் வலி எரிமலைக்குழம்பு, பா.ஜனதாவுக்கு அழிவை ஏற்படுத்தும்’’ என்று சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:–

விவசாயிகளின் திடீர் எழுச்சி

விவசாயிகளின் வேதனை தீயை வெறும் அறிக்கைகள் வாயிலாக அணைத்திட முடியாது. மராட்டியத்தில் திங்கட்கிழமை நடந்த பந்த் அரசுக்கு மாபெரும் சவாலாக விளங்குகிறது. ஆகையால், அரசு இப்போது தகுந்த பாடம் கற்கவில்லை என்றால், விவசாயிகளது வலிகளின் எரிமலைக்குழம்பு பாரதீய ஜனதாவுக்கு அழிவை ஏற்படுத்தி விடும்.

விவசாயிகளின் உரிமையை நிலைநாட்ட இது வெறும் ஆரம்பம் தான். விவசாயிகளின் கடைசி கோரிக்கையை நிறைவேற்றும் வரையில், இந்த போராட்டம் தொடரும். இந்த போராட்டத்துக்கு சிவசேனா முழு ஆதரவு அளிக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காட்சிகளை அரசின் உணர்வற்ற நிலை மீதான விவசாயிகளின் திடீர் எழுச்சியாக பாருங்கள்.

விவசாயிகள் தேச விரோதிகளா?

விவசாயிகள் இப்போதாவது இந்த அரசை புரிந்து கொள்வார்களா?. நாசிக்கில் இணையதள சேவையை பா.ஜனதா அரசு முடக்க முயற்சிக்கிறது. நாசிக் என்ன அமைதியற்ற காஷ்மீரா? அல்லது போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தான் தேச விரோதிகளா?.

விவசாயிகளின் ஒற்றுமையை அரசு மெதுவாக புரிந்து கொள்கிறது. முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.


Next Story