பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு திரளான பக்தர்கள் தரிசனம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் உலா வந்து கோவிலின் கிழக்கு வாசல் எதிரே உள்ள ஆராட்டு மண்டபத்தில் எழுந்தருளினார்.
மணலிக்கரை மாத்தூர் மட தந்திரி சங்கர நாராயணரு பூஜைகளை நடத்தினார். அதை தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் 2 அம்மன் விக்கிரங்களுக்கும் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.
சந்தனக்காப்பு அலங்காரம்
அதன் பிறகு ஆராட்டு மண்டபத்திற்கு அம்மன் சிலைகள் கொண்டு வரப்பட்டு மஞ்சள் பொடி அபிஷேகம் நடந்தது. மீண்டும் கடலில் ஆராட்டு நடத்தப்பட்டு கிழக்கு வாசல் வழியாக அம்மன் சிலைகள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் வைர கிரீடத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முன்னதாக ஆராட்டு நிகழ்ச்சியை பகவதி அம்மன் கோவில் மேல்சாந்திகள் விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, கீழ் சாந்திகள் ராமகிருஷ்ணன் போற்றி, ஸ்ரீனிவாசன் போற்றி, ஸ்ரீதரன் போற்றி ஆகியோர் நடத்தினர்.

Related Tags :
Next Story