பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா
x
தினத்தந்தி 8 Jun 2017 1:30 AM IST (Updated: 8 Jun 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் சமூக நல பிரிவு, மாணவ செவிலியர் சங்கம், தேசிய சேவை திட்ட அமைப்பு சார்பில், உலக சுற்றுச்சூழல் தினவிழா நடந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் சமூக நல பிரிவு, மாணவ செவிலியர் சங்கம், தேசிய சேவை திட்ட அமைப்பு சார்பில், உலக சுற்றுச்சூழல் தினவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி வரவேற்றார். காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் அம்பிகாபதி திருமலை, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.

பின்னர் அவர் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்போம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவி பேராசிரியை சங்கீதா நன்றி கூறினார்.

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 2017– 2018–ம் ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு 04639–242199, 99949 09422 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Next Story