சமூக ஆர்வலரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மூடா அதிகாரி கைது ஊழல் தடுப்பு படையினர் கையும், களவுமாக பிடித்தனர்
சமூக ஆர்வலரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மூடா அதிகாரியை ஊழல் தடுப்பு படையினர் கையும், களவுமாக பிடித்தனர்.
மைசூரு,

சமூக ஆர்வலர்
மைசூரு டவுன் இனகல் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். சமூக ஆர்வலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மூடா கையகப்படுத்திய விவசாயிகளின் நிலங்களை பற்றிய தகவல்களை கேட்டு மனு செய்திருந்தார்.
ஆனால் அந்த மனுவின் மீது அவருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மூடாவில் நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரியான மல்லேசய்யா என்பவரை நேரில் சந்தித்து நாகேஷ் மூடா கையகப்படுத்திய விவசாயிகளின் நிலங்கள் பற்றிய தகவல்களை கேட்டு உள்ளார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
அப்போது மல்லேசய்யா, கையகப்படுத்திய விவசாய நிலங்கள் பற்றிய தகவலை வழங்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று நாகேசிடம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க நாகேசும் ஒப்புக் கொண்டார். ஆனால் அவருக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை.
இதுகுறித்து நாகேஷ் மைசூருவில் உள்ள ஊழல் தடுப்பு படையில் புகார் செய்தார். ஊழல் தடுப்பு படையினர் நாகேசுக்கு சில அறிவுரைகளை வழங்கினர். மேலும் அவரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மல்லேசய்யாவை மூடா அலுவலகத்தில் சந்தித்த நாகேஷ் ரூ.5 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். அப்போது பணத்தை மல்லேசய்யா பெற்றுக் கொண்டார்.
கையும், களவுமாக பிடித்தனர்
அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர் கையும், களவுமாக மல்லேசய்யாவை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லஞ்ச பணம் ரூ.5 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து கைதான மல்லேசய்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story