செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து


செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து
x
தினத்தந்தி 8 Jun 2017 4:00 AM IST (Updated: 8 Jun 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி நேற்று மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று மதியம் 12.20 மணியளவில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

சிறிது தூரம் சென்றதும் அந்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 

போக்குவரத்து பாதிப்பு

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தடம் புரண்ட ரெயில் அப்புறப்படுத்தப்பட்டு தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பின்னர் ரெயில்கள் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டன. 

ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளதானதால் அந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story