பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை: மதுவை தரையில் ஊற்றி போராட்டம்
மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை கண்டித்து கரூரில் மதுவை தரையில் ஊற்றி பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
கரூர்,
கரூர் காந்தி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடை உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி மூடப்பட்டது. இந்த நிலையில் அந்த டாஸ்மாக் கடையோடு இணைந்த பாரில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து பா.ஜ.க.வினர் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு புகார் தெரிவித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் காந்தி கிராமத்தில் மூடிய டாஸ்மாக் கடையின் அருகே பார் இருந்த இடத்தில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை கண்டித்து பா.ஜ.க. இளைஞர் அணி மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நகர தலைவர் செல்வன் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை அந்த கடைக்கு சென்று போராட்டம் நடத்தினர்.
மதுவை தரையில் ஊற்றி...
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுவை எடுத்து வந்து தரையில் ஊற்றி மதுவுக்கு எதிராக கோஷ மிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் பிடித்து சென்றனர்.
இதேபோல கரூர் நகரப்பகுதியில் மக்கள் பாதை எனும் இடத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் அருகே மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, அந்த கடையையும் பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் குறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், “கரூர் நகரப்பகுதியில் மதுவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்துகிறோம். தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்” என்றனர்.

Related Tags :
Next Story