செங்குன்றத்தில் கட்டிட பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி பரிதாப சாவு


செங்குன்றத்தில் கட்டிட பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி பரிதாப சாவு
x
தினத்தந்தி 8 Jun 2017 2:47 AM IST (Updated: 8 Jun 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தில் கட்டிட பணி நடந்தபோது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. அப்போது கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

செங்குன்றம், 

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்தவர் கிரேஷி. இவரது வீட்டின் 2-வது மாடியில் ஜெபக்கூட்டம் நடத்த புதிதாக அறை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சங்கரராவ் (வயது 40), அவருடைய மனைவி பத்மாவதி (35) ஆகிய இருவரும் ஈடுபட்டு இருந்தனர்.

நேற்று மாலையில் அவர்கள் இருவரும் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். பத்மாவதி வீட்டின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஈரமான கட்டிட சுவர், திடீரென இடிந்து விழுந்தது. இதில் கீழே வேலை செய்து கொண்டிருந்த பத்மாவதி மீது கட்டிட இடிபாடுகள் விழுந்து அமுக்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய பத்மாவதி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story