திருமணமான 3 மாதத்தில் இளம்பெண், தூக்கில் பிணமாக தொங்கினார்


திருமணமான 3 மாதத்தில் இளம்பெண், தூக்கில் பிணமாக தொங்கினார்
x
தினத்தந்தி 8 Jun 2017 2:50 AM IST (Updated: 8 Jun 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண், தூக்கில் பிணமாக தொங்கினார் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் பெற்றோர் புகார்.

ஆவடி,

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 26). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த சசிகலா (21) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் சசிகலா, தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அவருடைய மாமியார் வைலட் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த நசரத்பேட்டை போலீசார், சசிகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில் தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நசரத்பேட்டை போலீசில் சசிகலாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சசிகலாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், அவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார். 

Next Story